நாம் வழக்கமாக நமது Pen Drive-வில் அத்தியாவசியமான Files மற்றும் Folders சேமித்து வைப்பது வழக்கம். Malwares and Spywares உடனடியாக மற்றும் எளிதாக தாக்குவது Pen Drive-ஐ என்பதனால் சில சமயங்களில் நமது அதி முக்கியமான Folders மறைக்கப்பட்டு விடலாம். அதாவது உங்கள் Pen Drive-வில் Folders இருக்கும். ஆனால் உங்களால் பார்க்கவோ, உபயோகிக்கவோ இயலாது. Pen Drive-வில் Usage Space-ஐ சோதித்தால் Folders மறைக்கப்பட்டிருப்பதை உணரலாம்.
ஒரு சில Malware-களின் வேலையே Pen Drive-வில் உள்ள Folders-களின் Attribute மாற்றி விடுவதுதான். இதனால் உங்கள் Pen Drive-வில் உள்ள Folders-களின் Attribute Hidden ஆக மாறி விடுகிறது. இதை சரி செய்ய Explorer-ல் Attribute பகுதிக்குச் சென்றால் அங்கு Attribute வசதி செயல் இழக்கம் செய்யப்பட்டிருக்கும். ஒரு சில வைரஸ் எதிர்ப்பு மென்பொருட்கள் (Anti Virus) மூலமாக முயற்சி செய்தாலும் சில சமயங்களில் மீட்பது சிரமம்தான்.
இந்த நிலையில் என்ன செய்யலாம்?
முதலில் உங்கள் Pen Drive-வின் Drive லெட்டரை அறிந்து கொள்ளுங்கள். உதாரணமாக H: என வைத்துக் கொள்வோம். Command Prompt ஐ திறந்து கொண்டு H: என டைப் செய்து Enter கொடுங்கள்.
இனி வரும் H:> என்ற Prompt-ல் attrib -r -s -h *.* /s /d என டைப் செய்து என்டர் கொடுங்கள்.
உங்கள் Pen Drive-வில் உள்ள Files மற்றும் Folders-களின் அளவைப் பொறுத்து இந்த கட்டளை செயல்படும் நேரம் மாறுபடும். மறுபடியும் H:> ப்ராம்ப்ட் வந்த பிறகு Exit என டைப் செய்து என்டர் கொடுத்து Windows-க்கு வந்து விடலாம். இப்பொழுது My Computer சென்று Pen Drive-வை திறந்து பாருங்கள். உங்கள் கோப்புறைகள் மீட்டெடுக்கப் பட்டிருப்பதை காணலாம்.
Quantity :
Add to Cart