Cart btn

Sunday, November 10, 2013

Trial version மென்பொருள்களை நிரந்தரமாக்க...

youserials
இணையத்தில் இப்போது இலவச மென்பொருள் அதிகளவில் கிடைக்கிறது. நமக்கு தேவையான மென்பொருள்களை நாம் தரவிறக்கி பயன்படுத்துகிறோம். அவ்வாறு தறவிறக்கம் செய்யப்பட்ட மென்பொருளானது ஒரு குறிப்பிட்ட கால எல்லைக்குள் Expire ஆகிவிடும்.

அதாவது அந்த மென்பொருள் trial version -ஆக மட்டுமே நமக்கு கிடைக்கிறது. மீண்டும் நாம் அதனை பயன்படுத்த முடியாது. அப்படி தேவைப்பட்டால் அதனை பணம் கொடுத்துதான் வாங்க வேண்டும். இச்சூழ்நிலையில் எப்போதாவது பயன்படக்கூடிய ஒரு சில மென்பொருள்களை நாம் ஏன் வீணாக பணம் கொடுத்து வாங்க வேண்டும்? இதற்காகவே உதவுகிறது youserials தளம்.

இந்த தளத்தில் அனைத்து வகையான Software-களுக்கும் Serial கிடைக்கிறது. இங்கு கிடைக்கும் சீரியல் எண்ணை காப்பி செய்துகொண்டு, இலவசமென்பொருளை நிறுவும்போது நாம் Copy செய்த சீரியல் எண்ணைக் கொடுத்து முழுவதுமாக Install செய்து முடிக்கலாம். இதனால் அந்த மென்பொருள் Expire ஆகாது.

Saturday, November 9, 2013

Desktop Right Click Menu-வில் அடிக்கடி உபயோகிக்கும் அப்ளிகேஷனை நிறுவ...

Registry Editor
Image 1
Windows Desktop-ல் Right Click செய்யும் பொழுது வரும் மெனுவில், நாம் அடிக்கடி உபயோகிக்கும் மென்பொருட்களை (Word, Photoshop போன்றவை) சேர்க்க என்ன செய்யலாம் எனப் பார்க்கலாம். (உதாரணமாக Word-ஐ இணைக்க என்ன செய்யலாம்?..

Registry Editor
Image 2
இதற்கு Windows Registry-யில் சில மாற்றங்கள் செய்ய வேண்டியிருப்பதால், Start Menu-வில் உள்ள Search Box-ல் அல்லது Run Command-ல் Regedit.exe ஐ டைப் செய்து Registry Editor ஐ திறந்து கொள்ளுங்கள். (Image 1)

இங்கு, HKEY_CLASSES_ROOT -> Directory -> Background -> shell என்ற பகுதிக்கு செல்லுங்கள். (Image 2)

இதில் shell என்ற கீயில் Right Click செய்து திறக்கும் மெனுவில், New -> Key யில் க்ளிக் செய்யுங்கள். (Image 2)

Registry Editor
Image 3
இங்கு டெஸ்க் டாப் வலது க்ளிக் மெனுவில் என்ன பெயரில் தோன்ற வேண்டுமோ, அந்த பெயரை டைப் செய்யுங்கள். (உதாரணமாக Word)

பிறகு, நாம் உருவாக்கிய இந்த Word கீயிற்கு ஒரு Command Key-ஐ உருவாக்க வேண்டும். அதற்கு, நாம் உருவாக்கிய Word என்ற கீயில் Right Click செய்து New -> Key-ஐ தேர்வு செய்து, அதற்கு command (Lower case-இல்) எனப் பெயரிடுங்கள். (Image 3)

Explorer
Image 4
அடுத்ததாக, நமக்கு நாம் இணைக்க விரும்பும் அப்ளிகேஷனுடைய லொகேஷனை கொடுக்க வேண்டும். இதற்கு எளிதான வழி, Winword.exe என்ற File Program Files\Microsoft Office\Office12 என்ற Folder-ல் இருக்கும். இந்த Folder-க்கு சென்று, Word File-ஐ Shift + Right click செய்தால் Context மெனுவில் Copy as path என்பதை Click செய்தால் அந்த File-உடைய path, clipboard இல் சேமிக்கப்பட்டு விடும். (Image 4)

Registry Editor
Image 5
இனி Registry Editor-ல் இடது புறமுள்ள பேனில் Command Key ஐ தேர்வு செய்து, வலது புற பேனில் உள்ள Default Key-ஐ Double Click செய்து, Copy செய்து வைத்த path-ஐ paste செய்யுங்கள். (Image 5)

அருகில் உள்ள படத்தில் உள்ளது போல இருக்க வேண்டும்.

இனி உங்கள் டெஸ்க்டாப்பில் Right Click செய்தால், Menu-வில் Word இணைக்கப் பட்டிருப்பதை பார்க்கலாம். இது போல எந்த ஒரு அப்ளிகேஷனையும் இணைக்க முடியும்.

Pen Drive-வில் மறைந்துபோன ஃபோல்டர்களை மீட்டெடுக்க...

CMD
Image 1
நாம் வழக்கமாக நமது Pen Drive-வில் அத்தியாவசியமான Files மற்றும் Folders சேமித்து வைப்பது வழக்கம். Malwares and Spywares உடனடியாக மற்றும் எளிதாக தாக்குவது Pen Drive-ஐ என்பதனால் சில சமயங்களில் நமது அதி முக்கியமான Folders மறைக்கப்பட்டு விடலாம். அதாவது உங்கள் Pen Drive-வில் Folders இருக்கும். ஆனால் உங்களால் பார்க்கவோ, உபயோகிக்கவோ இயலாது. Pen Drive-வில் Usage Space-ஐ சோதித்தால் Folders மறைக்கப்பட்டிருப்பதை உணரலாம்.

ஒரு சில Malware-களின் வேலையே Pen Drive-வில் உள்ள Folders-களின் Attribute மாற்றி விடுவதுதான். இதனால் உங்கள் Pen Drive-வில் உள்ள Folders-களின் Attribute Hidden ஆக மாறி விடுகிறது. இதை சரி செய்ய Explorer-ல் Attribute பகுதிக்குச் சென்றால் அங்கு Attribute வசதி செயல் இழக்கம் செய்யப்பட்டிருக்கும். ஒரு சில வைரஸ் எதிர்ப்பு மென்பொருட்கள் (Anti Virus) மூலமாக முயற்சி செய்தாலும் சில சமயங்களில் மீட்பது சிரமம்தான்.

இந்த நிலையில் என்ன செய்யலாம்? 

CMD
Image 2
முதலில் உங்கள் Pen Drive-வின் Drive லெட்டரை அறிந்து கொள்ளுங்கள். உதாரணமாக H: என வைத்துக் கொள்வோம். Command Prompt ஐ திறந்து கொண்டு H: என டைப் செய்து Enter கொடுங்கள். 

இனி வரும் H:> என்ற Prompt-ல் attrib -r -s -h *.* /s /d என டைப் செய்து என்டர் கொடுங்கள். 

உங்கள் Pen Drive-வில் உள்ள Files மற்றும் Folders-களின் அளவைப் பொறுத்து இந்த கட்டளை செயல்படும் நேரம் மாறுபடும். மறுபடியும் H:> ப்ராம்ப்ட் வந்த பிறகு Exit என டைப் செய்து என்டர் கொடுத்து Windows-க்கு வந்து விடலாம். இப்பொழுது My Computer சென்று Pen Drive-வை திறந்து பாருங்கள். உங்கள் கோப்புறைகள் மீட்டெடுக்கப் பட்டிருப்பதை காணலாம்.

Friday, November 8, 2013

மறைக்கப்பட்ட Administrator கணக்கில் நுழைய...

Windows 7
Image 1
Windows 7 மற்றும் Vista OS-களில் Windows XP-யில் உள்ளது போல Administrator Account இல்லையே என்று பலரும் யோசித்திருக்கக் கூடும். இந்த இயங்கு தளங்களிலும் Administrator Account வழக்கம் போல உண்டு. ஆனால் அது மறைக்கப்பட்டுள்ளது.

ஒரு வேளை உங்கள் கணினியில் ஏதாவது கோளாறு ஏற்பட்டு, இந்த Administrator Account-ல் நுழைந்து சரி செய்து விடலாம் என்று சிந்திக்கும் பொழுது, இந்த கணக்கை எப்படி enable செய்வது என்று பார்க்கலாம். 

Run as Administrator
Image 2
வழக்கம் போல உங்கள் Windows User Account-ல் நுழைந்துக் கொள்ளுங்கள். Search Box இல் CMD என டைப் செய்து மேலே தோன்றும் Command Prompt லிங்கில் Right Click செய்து Run as Administrator-ஐ Click செய்து Command Prompt சென்று விடுங்கள். 

CMD
Image 3
இங்கு net user administrator /active:yes என டைப் செய்து என்டர் கொடுக்கவும். 

டைப் செய்யும் பொழுது சரியான Space ஆகியவற்றை கவனித்து மேலே தரப்பட்டுள்ளது போல உள்ளீடு செய்யவும். The command completed successfully என்ற செய்தி வருவதை கவனிக்கவும். இப்பொழுது ஒருமுறை Logout செய்து பின்னர் வரும்பொழுது இந்த Administrator கணக்கும் திரையில் தோன்றுவதை கவனிக்கலாம். பெரும்பாலும் இந்த கணக்கிற்கு கடவுச்சொல் ஏதும் இருப்பதில்லை.

CMD
Image 4
இந்த வசதியை இப்படியே தொடர்வதாக இருந்தால் இந்த கணக்கிற்கு கடவுச்சொல் இட்டு வைப்பது நல்லது. அல்லது உங்கள் வேலை முடிந்த பிறகு, இந்த கணக்கை மறுபடி பழையபடி மறைத்து வைக்க மேலே சொன்ன வழிமுறையின்படி சென்று net user administrator /active:no எனும் கட்டளையை கொடுத்துவிடலாம். 

இதே net user கட்டளையை பயன்படுத்தி Windows XP-யில் மற்றொரு admin rights உள்ள பயனர் கணக்கில் நுழைந்து, DOS prompt சென்று net user administrator * என்ற கட்டளையை உள்ளீடு செய்வதன் மூலமாக Administrator கணக்கின் கடவுசொல்லை மாற்றிவிடலாம். (பழைய கடவுச்சொல் நாம் அறிந்திருக்க வேண்டியதில்லை) 

Thursday, November 7, 2013

ஃபேஸ்புக் சாட்டில் ஒரு சில நண்பர்களிடமிருந்து மட்டும் ஒளிந்துகொள்ள...

Facebook Chat
ஃபேஸ்புக்கில் நீங்கள் Log in செய்கின்ற பொழுதெல்லாம் உங்களுக்காகவே காத்திருந்தது போல, Hi, How are you என நீங்கள் விரும்பாத நண்பர் Chatல் தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கிறாரா? 

இது போன்ற ஒரு சில தொல்லைதரும் நண்பர்களுக்கு மட்டும் நீங்கள் Offlineஇல் இருப்பது போன்று தோன்றவைக்க என்ன செய்யலாம்?

முதலில் உங்கள் Facebook கணக்கில் Log in செய்து கொள்ளுங்கள். பிறகு வலது புறத்திலுள்ள Option என்பதை கிளிக் செய்து அதில் Advanced Chat Settings என்பதை தெரிவு செய்யுங்கள்.

வருகின்ற மெனுவில் Turn on chat for all friends except... என்பதை கிளிக் செய்து அதில் உங்களுக்கு அடிக்கடி தொல்லைதரும் நண்பர்களை இணைத்து விட்டு Save என்பதை அழுத்தவும்.

இனி இவர்களின் தொல்லை உங்களுக்கு இருக்காது.

Monday, November 4, 2013

MS Excel இல் Row மற்றும் Column ஐ மாற்றி அமைக்க...

MS Excel
Image 1
நாம் MS Excel பயன்பாட்டில் பணிபுரிந்து கொண்டிருக்கையில், Columnகளில் கொடுக்க வேண்டிய Dataக்களை Rowவில், அல்லது நேர் மாறாக டைப் செய்து விட்டதாக கொள்வோம். 

இப்படி Rowவில் உள்ள Dataக்களை Column முறைப்படி அல்லது Columnத்தில் உள்ள டேட்டாவை Row முறைப்படி எளிய முறையில் மாற்றி அமைக்க என்ன செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

மேலே உள்ள படத்தில் Rowவில் உள்ளதை போன்ற Dataவை தெரிவு தேர்வு செய்து Right Click செய்து Copy செய்து கொண்டு Work sheetல் எங்கு வேண்டுமோ அங்கு Cursorஐ வைத்து Right Click செய்து Paste Special ஐ Click செய்யுங்கள். இனி வரும் வசனப் பெட்டியில்,

MS Excel
Image 2
Transpose எனும் செக் பாக்சை தேர்வு செய்து OK கொடுங்கள். 

MS Excel
Image 3
இதே போன்று Rowவிலிருந்து Column த்திற்கு மாற்றவும் செய்யலாம்.