Cart btn

Thursday, October 31, 2013

புகைப்படங்களுக்கு வித்தியாசமான Effectகளை கொடுக்க....

PhotoFunia
உங்களுக்கு பிடித்தமான புகைப் படங்களுக்கு வித்தியாசமான Effect களை கொடுக்க மென்பொருட்கள் மூலம் செய்து மண்டையை பிய்த்துக் கொள்ளாமல் http://www.photofunia.com/ இணைய முகவரிக்கு சென்று பாருங்கள்.

Photofunia என்பது ஒரு Online Photo Editing இணையத்தளமாகும். உங்கள் புகைப்படத்தை Upload செய்தால் இதில் உள்ள மென்பொருள் அந்த படத்தில் உள்ள முகத்தை மட்டும் அதுவாகவே கண்டறிந்து, 100க்கும் மேற்பட்ட Effect களில் உங்கள் புகைப்படத்தை மெருகூட்டுகிறது.

கண்ணைக் கவரும் Effect கள்.. ஏராளம் ஏராளம். போய்தான் பாருங்க...

Show Desktop icon ஐ திரும்ப உருவாக்க...

Show Desktop
சிலசமயம் நாம் தவறுதலாக Quick Launch Bar ல் உள்ள Show Desktop Iconஐ டிலீட் செய்து விட்டால். அதை எப்படி திரும்பவும் உருவாக்குவது.

Way one:
நோட்பேடை திறந்து கொண்டு கீழே உள்ளவற்றை டைப் செய்யவும்.

Command=2
IconFile=explorer.exe,3 
[Taskbar] 
Command=ToggleDesktop 

இந்த கோப்பை சேமிக்கும் பொழுது, கொடுத்து ஃபைல் டைப்பை All Files என்பதை தேர்வு செய்து, Show Desktop.scf எனப் பெயரிட்டு சேமித்துக் கொள்ளவும். இப்பொழுது நீங்கள் செய்யவேண்டியது, அந்த கோப்பை Quick Launch bar க்கு Drag செய்யவும். 

Way two: 
Start ---> Run க்கு சென்று regsvr32/n/i:Ushell32.dll என டைப் செய்து ஓகே கொடுங்கள். இந்த கட்டளை Show Desktop ஐகானை திரும்ப கொடுக்கும். இந்த கோப்பை சேமிக்கும் பொழுது, கொடுத்து ஃபைல் டைப்பை All Files என்பதை தேர்வு செய்து, Show Desktop.scf எனப் பெயரிட்டு சேமித்துக் கொள்ளவும். 

இப்பொழுது நீங்கள் செய்யவேண்டியது, அந்த கோப்பை Quick Launch bar க்கு Drag செய்து விடவும்.

Wednesday, October 30, 2013

எவ்வித மென்பொருளும் இன்றி Youtube வீடியோக்களை Download செய்து கொள்ள...

Youtube வீடியோக்களை Download செய்து கொள்ள இதோ மிக இலகுவான வழி இதோ. 

Youtube வீடியோக்களை டவுன்லோட் செய்துகொள்ள நிறைய மென்பொருள்கள் இணைய தளத்தில் உள்ளன. ஆனால் எவ்வித மென்பொருளும் இன்றி உங்களுக்குத் தேவையான Youtube வீடியோக்களை இலகுவாக டவுன்லோட் செய்து கொள்ள முடியும்.

முதலில் நீங்கள் டவுன்லோட் செய்ய வேண்டிய வீடியோவின் URLஇன் முன்னால் SS என ரைப் செய்து அழுத்தவும். உதாரணமாக உங்களது URL இவ்வாறு (http://www.youtube.com/watch?v=o3mP3mJDL2k) இருக்குமாயின் அதனை பின்வருமாறு (http://www.ssyoutube.com/watch?v=o3mP3mJDL2k) கொள்ளவும்.

அங்கு உங்களது வீடியோவை எந்த Format இல் டவுன்லோட் செய்ய வேண்டுமோ அந்த Format ஐ க்ளிக் பண்ணினால் உங்களது வீடியோ டவுன்லோட் ஆகும். எவ்வித மென்பொருளும் இன்றி வீடியோக்களை இலகுவாக டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

Device Driver களை பேக்கப் எடுத்து கொள்ள...

Double Driver
Device Drivers கணினியில் உள்ள வன்பொருள் பாகங்கள் இயங்குதளத்துடன் (Operating System) இணைந்து இயங்க நிறுவப்படுது மென்பொருள்கள் ஆகும். பிரிண்டர், சவுண்ட், டிஸ்பிளே என்று எந்த பொருட்களை வாங்கினாலும் அதனுடன் Device Drivers CD வடிவில் தருவார்கள். அவற்றை கணினியில் நிறுவி கொள்ளலாம். ஒவ்வொரு வன்பொருட்களுக்கும் இது போன்று தனித்தனி CD என்று பெருகி விடும். அந்த Device Driver CD க்களை பாதுகாத்து வைத்து கொள்ளுதல் அவசியம்.

நமது கணினியில் இயங்குதளத்தை Reinstall செய்யும் போதுதான் பிரச்சினை ஆரம்பிக்கும். Device Drivers ஐ எங்காவது தொலைத்து இருப்போம். CD க்கள் பழுதாகி வேலை செய்யாமல் தொந்தரவு கொடுக்கும். இணையத்தில் சரியான Device Drivers க்காக தேடி அலைய வேண்டி இருக்கும். சில சமயங்களில் கிடைக்காமல் போகவும் வாய்ப்புண்டு. நமது வன்பொருட்கள் நிரந்தரமாக வேலை செய்யாமல் போகலாம்.

இந்த தலைவலியில் இருந்து தப்பிக்க ஒரு மென்பொருள் இலவசமாக கிடைக்கிறது. அதன் மூலம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டுள்ள அனைத்து ஹார்டுவேர் பொருட்களின் Device Driver களையும் நீங்கள் Backup எடுத்து வைத்து கொள்ள முடியும். அடுத்த முறை இயங்குதளத்தை Reinstall செய்யும் போது அந்த Backup ல் உள்ள அனைத்து Device Driver களையும் எளிதான முறையில் உபயோகித்து கொள்ள முடியும். Device Driver ருக்காக ஒவ்வொரு CD யாக தேடி அலைய வேண்டியதில்லை.

அந்த மென்பொருளின் பெயர் Double Driver. இந்த லிங்க்கை கிளிக் செய்து அந்த மென்பொருளை தரவிறக்கி கணினியில் நிறுவி கொள்ளவும். அதில் "Scan" பட்டனை அழுத்தினால் உங்கள் கணினியில் உள்ள வன்பொருட்களுக்கான அனைத்து Device Driver களும் தோன்றும்.

Backup கிளிக் செய்து வேண்டிய இடத்தில் சேமித்து கொள்ளலாம். Backup எடுத்து வைத்துள்ளவற்றை தேவைப்படும் போது Restore செய்ய விரும்பினால் Backup ல் dd.exe என்ற ஃபைல் இருக்கும். அதனை ஓபன் செய்து Restore அழுத்தவும். அதில் தோன்றும் Device Driver களில் தேவையானவற்றை நிறுவி கொள்ளவும்.

Saturday, October 26, 2013

Screen Shot எடுக்க...

Print Screen Shot
Image 1
இணையங்களில் மற்றும் கணணி தொடர்பான பாடக்குறிப்புக்களில் கணணியின் திரை படமாக்கப் பட்டிருக்கும். இதனை எவ்வாறு செய்வது என பார்ப்போம்.

ஸ்க்ரீன் ஷொட் எடுக்க வேண்டிய நிலையில் வைத்து தட்டச்சுப் பலகையில் வலது பக்கம் பாருங்கள் Print Screen என்றொரு கீ இருக்கும் அதை இப்போது தட்டுங்கள். 

Print Screen கீயைத் தட்டியதும் உங்கள் கணனியின் திரையில் தெரியும் விடயங்கள் இப்போது கிளிப் போட்டில் சேமிக்கப் பட்டிருக்கும்.

உதாரணமாக இப்போது கீயை தட்டிவிட்டு மைக்ரொசாப்ட் வேர்ட் சென்று Edit ---> Paste என்று சொடுக்குங்கள் உடனடியாக உங்கள் கணனித் திரையில் தெரிந்த காட்சிகள் உங்கள் வேர்ட் டொகுமென்டில் வரும். கீழே உள்ள படத்தை பார்க்க.

Print Screen Shot
Image 2
அடுத்து ஸ்க்ரீன் ஷொட்டை எவ்வாறு படமாகச் சேமிப்பது என்று பார்ப்போம். அதாவது முதலில் சொன்னவாறு Print Screen விசையை அமத்திய பின்னர் போடோசொப் அல்லது பெயின்ட் போன்ற படங்களை சேமிக்கக் கூடிய ஏதாவது புரோகிராமுக்குச் சென்று Edit ---> Paste (Ctrl + V) என்று சொடுக்குங்கள். இப்போது திரையின் படம் உங்கள் பெயின்டில் ஒரு படமாக அமர்ந்து இருக்கும். பின்னர் வழமைபோல சேமித்துக் கொள்ளலாம். இங்கு இருக்கும் படம் அவ்வாறு சேமிக்கப்பட்டதே!

Thursday, October 24, 2013

இஸ்லாமியர்களுக்கான மொபைல்

Islamic Mobile
சென்ற நவம்பர் இறுதி வாரத்தில், டில்லியில் இஸ்லாமியர்களுக்கான மொபைல் போனாக குரான் மொபைல் என்மேக் க்யூ 3500 என்ற போன் விற்பனைக்கு அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. 

இஸ்லாமியர்களுக்கான டிஜிட்டல் சாதனங்களைத் தயாரித்து உலக அளவில் வழங்கி வரும் என்மேக் நிறுவனம் இதனை வடிவமைத்து வழங்கியுள்ளது. 

இந்த போன் ஏற்கனவே பாகிஸ்தான், மலேசியா, மத்திய கிழக்கு நாடுகள், ஏன் அமெரிக்காவிலும் அறிமுகப்படுத்தப்பட்டு வெற்றிகரமாக விற்பனை ஆகிவருகிறது. 

இதன் சிறப்பம்சம் என்னவெனில், இந்த போனில் புனித குரான் உரையை படிக்கவும் கேட்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது. இரண்டு சிம் இயக்கத்தில் இயங்கும் இந்த மொபைல் போனில் கூடுதலாக 31 இஸ்லாமிய நூல்களின் உரையும் கிடைக்கிறது. அரபிய மொழியில் சிறந்த எழுத்துருவில் இந்த நூல்கள் தரப்பட்டுள்ளன. தொழுகை நடத்தும் வேளைகளில் தானாக சைலன்ட் மோடிற்கு இந்த போன் மாறிக் கொள்கிறது. இதனுடன் தரப்படும் திசை காட்டி, உலகின் எந்த மூலையில் இருந்தாலும், மெக்கா நகரம் இருக்கும் திசையைக் காட்டும். 

மேலும் 29 மொழிகளில் (தமிழ், உருது, ஆங்கிலம், வங்காளம் மற்றும் மலையாளம் உட்பட) மொழி பெயர்ப்பு செய்யப்பட்டும் புனித குரான் இதில் தரப்பட்டுள்ளது. வேகமாக இயங்கும் இந்நாட்களில், இஸ்லாமியர்கள் தங்கள் குழந்தைகளுக்கு மதக் கடமை ஆற்றுவதை நினைவு படுத்த இந்த போன்களை வாங்கி அளித்து வருகின்றனர். இதில் உள்ள புனித குரான் மற்றும் பிற மதக் கோட்பாட்டு நூல்களைப் படித்து, குறிப்பிட்ட இடத்தில் அடையாளக் குறியீடு செய்து வைக்கலாம். இதன் மூலம், படித்து முடித்த இடத்திலிருந்து மீண்டும் தொடர்ந்து படிக்க முடிகிறது.

இதில் தரப்படும் அப்ளிகேஷன்களும் விசேஷமானவை. ஸகட் கால்குலேட்டர், டஸ்பி கவுண்ட்டர், ஹஜ் வழிகாட்டி ஆகிய அப்ளிகேஷன்கள் இஸ்லாமியர்களின் மத நடைமுறைகளுக்கு உதவுகின்றன.

TolMol.com என்ற இணைய தளத்தின் மூலம் இதனை ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ளலாம்.

Tuesday, October 22, 2013

பேஸ்புக்கில் வைரஸ்

Facebook
பேஸ்புக் மற்றும் கூகுள் போன்ற சமூக வலைதளங்களில் நிறைய செக்கியூரிட்டி குறைபாடுகள் வந்த வண்ணம் உள்ளன. சமீபத்தில் கூட பேஸ்புக் ஓனர் மார்க் ஜுக்கர்பெர்கின் பேஸ்புக் அக்கவுன்டையே ஒருவர் ஹாக் செய்து பேஸ்புக்கில் உள்ள செக்கியூரிட்டி குறைபாட்டை உணர்த்தினார்.

இது போன்ற பிரச்சனைகளுக்கு ஒரு பக்கம் தீர்வு காண்ப்பட்டு வந்தாலும் சில விஷமிகள் வைரஸை பரப்பக்கூடிய போஸ்ட்கள், பணங்களை ஏமாற்ற மற்றும் அச்சுறுத்தும் வகையில் உள்ள போஸ்ட்களை பேஸ்புக்கில் அப்லோட் செய்கின்றனர். சில சைபர் கிரிமினல்கள் உங்களுது நண்பர்கள் யாராவது ஒருவர் போஸ்ட் செய்வது போல அவர்களுது பெயர்களிலேயே இது போன்ற போஸ்ட்களை அப்லோட் செய்வார்கள். கீழே உள்ள சிலைட்சோவில் எந்த வகையான போஸ்ட்கள் வந்தால் கவனத்துடன் இருக்க வேண்டும் என்பது போன்ற தகவலை பாருங்கள்.

பேஸ்புக் One-fact story என்ற தலைப்புடன் நிறைய போஸ்ட்கள் பேஸ்புக்கில் வருவதை நாம் பார்த்திருப்போம். இது போன்ற போஸ்ட் வந்தால் அதில் உள்ள தலைப்பை வைத்து அது உண்மையானதா என்பதை கூகுளில் பார்த்த பின்பு கிளிக் செய்யுங்கள்.

பேஸ்புக் Breaking news என்ற தலைப்பில் நிறைய போஸ்ட்களை பார்த்திருப்போம். இது போன்ற போஸ்டகளை தெரியாதவர்களிடம் இருந்து வந்தால் தவிர்த்துவிடுங்கள்.

பேஸ்புக் இந்த போஸ்டிற்க்கு கண்டிப்பாக Likes போடுங்கள் என்று கெஞ்சியபடி சில போஸ்ட்கள் வரும் அவைகளை தவிர்த்துவிடுங்கள்.

பேஸ்புக் உடல் எடையை குறைப்பதற்க்கு டிப்ஸ் என்ற வகையில் போஸ்ட்கள் வரும் அவைகளை கிளிக் செய்ய வேண்டாம்.

பேஸ்புக் பெயர் தெரியாத லிங்கை கொண்டு செய்திகள் வந்தால் கிளிக் செய்ய வேண்டாம்.

பேஸ்புக் கிப்ட் கார்டுகளை பகிர்ந்து கொள்ளுங்கள், கிரீட்டிங் கார்ட் மற்றும் பரிசுகளுக்கு கிளிக் செய்யுங்கள் என்று போஸ்ட்கள் வந்தால் கிளிக் செய்யாதீர்கள். இவைகளில் தான் வைரஸ் அதிகம் பரவும்.

Sunday, October 13, 2013

செல்போனின் தரத்தை அறிவது எப்படி?

Mobile
காலையில் தூக்கத்திலிருந்து விழித்து எழுந்தது முதல் இரவு தூங்கப்போகும் வரை உபயோகப் படுத்தக்கூடிய பொருட்கள் எல்லாமே தரமானதாக இருக்க வேண்டும் என்று நாம் ஒவ்வொருவரும் விரும்புவோம். அப்படி அன்றாடம் உபயோகிக்கக்கூடிய பொருள்களில் செல்போன் அதிமுக்கியமான பொருளாக மாறியுள்ள கால கட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். குடும்பத்திற்கு ஒன்று என்றிருந்த நிலை மாறிப்போய் தனி நபரொருவர், ஒன்றிற்கு மேல் செல்போன்களை பயன்படுத்துகின்ற சூழ்நிலையில் இருந்து கொண்டிருக்கிறோம்.

செல்போன்களை அதிகமான நேரம் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அதிகளவில் இருக்கிறது என்ற உண்மையை யாரும் மறுக்க முடியாது, பாதிப்புகள் குறித்து பிறகு வரக்கூடிய பதிப்புகள் மூலம் தெரிந்து கொள்வோம். இந்த செய்தியின் மூலம் நாம் வாங்கியிருக்கின்ற அல்லது வாங்கப்போகின்ற செல்போன்களின் தரம் என்ன என்பதை தெரிந்துக் கொள்வோம். அதாவது நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருள்களின் தரம் உயர்ந்த அல்லது குறைவான அல்லது போலியான பொருட்கள் மார்க்கெட்டில் வலம் வந்து கொண்டிருக்கின்ற சூழலில் செல்போனின் தரத்தை எதனை அடிப்படையாக கொண்டு நிர்ணயிப்பது பற்றி அறிவோம். 

உங்களுடைய செல்போனில் *#06# என்று அழுத்திய உடன் நீங்கள் பயன்படுத்தக் கூடிய செல்போனில் அடையாள நம்பர் 15 இலக்கங்களில் தெரியவரும். அப்படி கிடைக்ககூடிய எண்களில் 7 மற்றும் 8வதாக வரக்கூடிய எண்களை கீழ்கண்ட பட்டியலோடு ஒப்பிட்டு பார்த்து உங்களின் செல்போனின் தரத்தை அறிந்து கொள்ளுங்கள். 

7 மற்றும் 8வது எண் 00 என்றிருந்தால் தரமான தொழிற்சாலையில் தயாரித்தது என்பது மட்டுமல்ல உங்களின் செல்போனும் மிக மிக தரம் உயர்ந்தது என்பதை குறிக்கும். (மிக மிக நன்று) 

7 மற்றும் 8வது எண் 01 அல்லது 10 என்றிருந்தால் தயாரித்த நாட்டின் பெயர் பின்லாந்து மற்றும் தரமான பொருள் என்பதை குறிக்கும். (மிக நன்று) 

7 மற்றும் 8வது எண் 08 அல்லது 80 என்றிருந்தால் தயாரித்த நாட்டின் பெயர் ஜெர்மனி மற்றும் தரம் தாழ்ந்தது அல்ல என்பதை குறிக்கும். (நன்று) 

7 மற்றும் 8வது எண் 02 அல்லது 20 என்றிருந்தால் ஒருங்கிணைப்பு செய்தது துபாயில். தரமான பொருள் அல்ல என்பதை குறிக்கும். (சுமார்) 

7 மற்றும் 8வது எண் 13 என்றிருந்தால் ஒருங்கிணைப்பு செய்தது அஜேர்பயிஜான்;. தரம் குறைந்த பொருள் மற்றும் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்ககூடியதுமாகும். (மோசம்) 

மேற்சொன்ன செய்திகள் அனைத்தும் எதிர்வரும் காலங்களில் தரமான பொருள்களை தேர்ந்தெடுக்க உதவியாக இருக்கும் என்பதற்காகவே இந்த தகவல்களை இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.

கணினியில் USB PORT ஐ DISABLE செய்வது எப்படி?

USB Port
USB PORT அனைவருக்கும் பயன் உள்ளதாக இருந்தாலும் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகம் போன்ற இடங்களில் USB னை பயன்படுத்தவது தடை செய்யப்பட்டு இருக்கும். கணினியில் VIRUS ஆல் பாதிப்பு வந்து விடும் அல்லவா! அதனால் USB PORT னை DISABLE செய்யப்பட்டு இருக்கும்.

இதை செய்யும் வழிமுறைகளை காண்போம்.

REGISTRY EDITOR செல்லவேண்டும் அதற்கு, RUN-----> TYPE "regedit" REGISTRY EDITOR சென்றவுடன், HKEY_LOCAL_MACHINE\SYSTEM\ CurrentControlSet\Services\UsbStor மேலே உள்ள PATH க்கு சென்று பின், START என்பதை இரண்டு முறை கிளிக் செய்யவேண்டும். அடுத்து ஒரு விண்டோ ஒன்று திறக்கும், அதில் HEXDECMIAL VALUE வை SELECT செய்து VALUE DATA என்ற இடத்தில் "4" என்று மாற்றவேண்டும். 

பின் OK கொடுத்து கணினியை RESTART செய்யவேண்டும்.இதில் கவனிக்க வேண்டிய வை 4 என்று மற்றும் முன் அதில் உள்ள எண்னை ("3") நினைவில் கொள்ளவேண்டும்.அதுதான் ENABLE செய்யவேண்டிய எண்.

Saturday, October 5, 2013

கணணியில் சிக்கிக்கொண்ட சீடியை வெளியே எடுப்பதற்கு...

CD ROM
நீங்கள் அடிக்கடி சீடி பயன்படுத்துபவராக இருந்தால் இந்த சூழ்நிலையில் நீங்கள் என்றாவது சிக்கி இருப்பீர்கள். ஆம் உங்கள் சீடி கணணியின் சீடி டிரைவில் இருந்து வெளியே வராமல் உங்களை மோசமான நிலையில் சிக்க வைக்கும்.

எத்தனை முறை சீடி டிரைவின் எஜெக்ட் பட்டனை அழுத்தினாலும் அப்படியே டிரைவ் வெளியே வராமல் இருக்கும். இந்த சூழ்நிலையில் என்ன செய்தால் சீடி டிரைவ் திறக்கப்பட்டு சீடி வெளியே எடுக்கும்படி கிடைக்கும் என்பதனைப் பார்க்கலாம்.

முதலில் சீடி டிரைவ் திறக்கப்பட்டு சிடி இருக்கும் அந்த பிளாஸ்டிக் ட்ரே வெளியே நீண்டு வரவில்லை என்றால் கவலைப்படாதீர்கள். இந்த சூழ்நிலையை சமாளித்து சீடியை கீழ்க்காணும் வழிகளைக் கையாண்டு வெளியே எடுக்கலாம். 

வழி 1: மை கம்ப்யூட்டர் ஐகானில் கிளிக் செய்திடுங்கள். உங்கள் டெஸ்க்டொப்பில் இந்த ஐகான் இல்லை என்றால் நிச்சயம் ஸ்டார்ட் மெனுவில் இருக்கும். இதனைத் திறந்தவுடன் உங்கள் கணணியின் டிரைவ்கள் அனைத்தும் காட்டப்படும். 

இதில் Devices with removable stroage என்ற பிரிவில் சீடியின் படத்துடன் ஒரு ஐகான் இருக்கும். அல்லது சிக்கிக் கொண்ட சீடி ஏதேனும் ஒரு நிறுவனம் தந்துள்ள பேக்கேஜ் என்றால் நிறுவனம் தந்துள்ள ஐகானுடன் அந்த டிரைவ் காட்டப்படும். 

இதன் மீது ரைட் கிளிக் செய்திடுங்கள். கிடைக்கும் மெனுவில் Eject என்ற பிரிவில் கிளிக் செய்திடுங்கள். உங்கள் சீடி டிரைவில் உள்ள எஜெக்ட் பட்டன் தேய்ந்து போய் நீங்கள் அழுத்துகையில் அதன் செயல்பாடு மேற்கொள்ளப்படாத சூழ்நிலையில் இந்த வழி செயல்படும். இதற்கும் சீடி டிரைவ் திறக்கவில்லை என்றால் அடுத்த வழியைப் பார்க்கலாம். 

வழி 2: பேப்பர் கிளிப் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். (ஜெம் கிளிப் என்றும் சிலர் இதனை அழைக்கின்றனர்) அதன் ஒரு முனையை பிரித்து நீட்டுங்கள். சீடி டிரைவின் எஜெக்ட் பட்டன் அருகே சிறிய துளை இருப்பதைக் காணுங்கள். நிச்சயம் இதுவரை நீங்கள் இதனைக் கண்டு கொள்ளாமல் இருந்திருப்பீர்கள். 

இப்போது நிச்சயம் இதன் உதவி வேண்டியதிருக்கிறது. இந்த துளையில் மெதுவாக பிரித்த பேப்பர் கிளிப்பின் சிறிய கம்பியை உள்ளே செலுத்தவும். சிறிது உள்ளே செலுத்தியவுடன் அது ஒரு இடத்திற்கு மேல் செல்லாது. 

இந்த இடத்தில் சிறிய அளவில் அழுத்தம் கொடுக்கவும். எஜெக்ட் செய்யும் போது இயங்கும் இன்டர்னல் லாக் உள்ள இடத்தில் இந்த அழுத்தம் கிடைப்பதால் டிரைவின் கதவு திறக்கும். 

உடனே சீடியை எடுத்துவிட்டு மீண்டும் டிரைவின் கதவினை மூடவும்.