|
Image 1 |
Windows Desktop-ல் Right Click செய்யும் பொழுது வரும் மெனுவில், நாம் அடிக்கடி உபயோகிக்கும் மென்பொருட்களை (Word, Photoshop போன்றவை) சேர்க்க என்ன செய்யலாம் எனப் பார்க்கலாம். (உதாரணமாக Word-ஐ இணைக்க என்ன செய்யலாம்?..
|
Image 2 |
இதற்கு Windows Registry-யில் சில மாற்றங்கள் செய்ய வேண்டியிருப்பதால், Start Menu-வில் உள்ள Search Box-ல் அல்லது Run Command-ல் Regedit.exe ஐ டைப் செய்து Registry Editor ஐ திறந்து கொள்ளுங்கள். (Image 1)
இங்கு, HKEY_CLASSES_ROOT -> Directory -> Background -> shell என்ற பகுதிக்கு செல்லுங்கள். (Image 2)
இதில் shell என்ற கீயில் Right Click செய்து திறக்கும் மெனுவில், New -> Key யில் க்ளிக் செய்யுங்கள். (Image 2)
|
Image 3 |
இங்கு டெஸ்க் டாப் வலது க்ளிக் மெனுவில் என்ன பெயரில் தோன்ற வேண்டுமோ, அந்த பெயரை டைப் செய்யுங்கள். (உதாரணமாக Word)
பிறகு, நாம் உருவாக்கிய இந்த Word கீயிற்கு ஒரு Command Key-ஐ உருவாக்க வேண்டும். அதற்கு, நாம் உருவாக்கிய Word என்ற கீயில் Right Click செய்து New -> Key-ஐ தேர்வு செய்து, அதற்கு command (Lower case-இல்) எனப் பெயரிடுங்கள். (Image 3)
|
Image 4 |
அடுத்ததாக, நமக்கு நாம் இணைக்க விரும்பும் அப்ளிகேஷனுடைய லொகேஷனை கொடுக்க வேண்டும். இதற்கு எளிதான வழி, Winword.exe என்ற File Program Files\Microsoft Office\Office12 என்ற Folder-ல் இருக்கும். இந்த Folder-க்கு சென்று, Word File-ஐ Shift + Right click செய்தால் Context மெனுவில் Copy as path என்பதை Click செய்தால் அந்த File-உடைய path, clipboard இல் சேமிக்கப்பட்டு விடும். (Image 4)
|
Image 5 |
இனி Registry Editor-ல் இடது புறமுள்ள பேனில் Command Key ஐ தேர்வு செய்து, வலது புற பேனில் உள்ள Default Key-ஐ Double Click செய்து, Copy செய்து வைத்த path-ஐ paste செய்யுங்கள். (Image 5)
அருகில் உள்ள படத்தில் உள்ளது போல இருக்க வேண்டும்.
இனி உங்கள் டெஸ்க்டாப்பில் Right Click செய்தால், Menu-வில் Word இணைக்கப் பட்டிருப்பதை பார்க்கலாம். இது போல எந்த ஒரு அப்ளிகேஷனையும் இணைக்க முடியும்.