Cart btn

Saturday, October 26, 2013

Screen Shot எடுக்க...

Print Screen Shot
Image 1
இணையங்களில் மற்றும் கணணி தொடர்பான பாடக்குறிப்புக்களில் கணணியின் திரை படமாக்கப் பட்டிருக்கும். இதனை எவ்வாறு செய்வது என பார்ப்போம்.

ஸ்க்ரீன் ஷொட் எடுக்க வேண்டிய நிலையில் வைத்து தட்டச்சுப் பலகையில் வலது பக்கம் பாருங்கள் Print Screen என்றொரு கீ இருக்கும் அதை இப்போது தட்டுங்கள். 

Print Screen கீயைத் தட்டியதும் உங்கள் கணனியின் திரையில் தெரியும் விடயங்கள் இப்போது கிளிப் போட்டில் சேமிக்கப் பட்டிருக்கும்.

உதாரணமாக இப்போது கீயை தட்டிவிட்டு மைக்ரொசாப்ட் வேர்ட் சென்று Edit ---> Paste என்று சொடுக்குங்கள் உடனடியாக உங்கள் கணனித் திரையில் தெரிந்த காட்சிகள் உங்கள் வேர்ட் டொகுமென்டில் வரும். கீழே உள்ள படத்தை பார்க்க.

Print Screen Shot
Image 2
அடுத்து ஸ்க்ரீன் ஷொட்டை எவ்வாறு படமாகச் சேமிப்பது என்று பார்ப்போம். அதாவது முதலில் சொன்னவாறு Print Screen விசையை அமத்திய பின்னர் போடோசொப் அல்லது பெயின்ட் போன்ற படங்களை சேமிக்கக் கூடிய ஏதாவது புரோகிராமுக்குச் சென்று Edit ---> Paste (Ctrl + V) என்று சொடுக்குங்கள். இப்போது திரையின் படம் உங்கள் பெயின்டில் ஒரு படமாக அமர்ந்து இருக்கும். பின்னர் வழமைபோல சேமித்துக் கொள்ளலாம். இங்கு இருக்கும் படம் அவ்வாறு சேமிக்கப்பட்டதே!

Thursday, October 24, 2013

இஸ்லாமியர்களுக்கான மொபைல்

Islamic Mobile
சென்ற நவம்பர் இறுதி வாரத்தில், டில்லியில் இஸ்லாமியர்களுக்கான மொபைல் போனாக குரான் மொபைல் என்மேக் க்யூ 3500 என்ற போன் விற்பனைக்கு அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. 

இஸ்லாமியர்களுக்கான டிஜிட்டல் சாதனங்களைத் தயாரித்து உலக அளவில் வழங்கி வரும் என்மேக் நிறுவனம் இதனை வடிவமைத்து வழங்கியுள்ளது. 

இந்த போன் ஏற்கனவே பாகிஸ்தான், மலேசியா, மத்திய கிழக்கு நாடுகள், ஏன் அமெரிக்காவிலும் அறிமுகப்படுத்தப்பட்டு வெற்றிகரமாக விற்பனை ஆகிவருகிறது. 

இதன் சிறப்பம்சம் என்னவெனில், இந்த போனில் புனித குரான் உரையை படிக்கவும் கேட்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது. இரண்டு சிம் இயக்கத்தில் இயங்கும் இந்த மொபைல் போனில் கூடுதலாக 31 இஸ்லாமிய நூல்களின் உரையும் கிடைக்கிறது. அரபிய மொழியில் சிறந்த எழுத்துருவில் இந்த நூல்கள் தரப்பட்டுள்ளன. தொழுகை நடத்தும் வேளைகளில் தானாக சைலன்ட் மோடிற்கு இந்த போன் மாறிக் கொள்கிறது. இதனுடன் தரப்படும் திசை காட்டி, உலகின் எந்த மூலையில் இருந்தாலும், மெக்கா நகரம் இருக்கும் திசையைக் காட்டும். 

மேலும் 29 மொழிகளில் (தமிழ், உருது, ஆங்கிலம், வங்காளம் மற்றும் மலையாளம் உட்பட) மொழி பெயர்ப்பு செய்யப்பட்டும் புனித குரான் இதில் தரப்பட்டுள்ளது. வேகமாக இயங்கும் இந்நாட்களில், இஸ்லாமியர்கள் தங்கள் குழந்தைகளுக்கு மதக் கடமை ஆற்றுவதை நினைவு படுத்த இந்த போன்களை வாங்கி அளித்து வருகின்றனர். இதில் உள்ள புனித குரான் மற்றும் பிற மதக் கோட்பாட்டு நூல்களைப் படித்து, குறிப்பிட்ட இடத்தில் அடையாளக் குறியீடு செய்து வைக்கலாம். இதன் மூலம், படித்து முடித்த இடத்திலிருந்து மீண்டும் தொடர்ந்து படிக்க முடிகிறது.

இதில் தரப்படும் அப்ளிகேஷன்களும் விசேஷமானவை. ஸகட் கால்குலேட்டர், டஸ்பி கவுண்ட்டர், ஹஜ் வழிகாட்டி ஆகிய அப்ளிகேஷன்கள் இஸ்லாமியர்களின் மத நடைமுறைகளுக்கு உதவுகின்றன.

TolMol.com என்ற இணைய தளத்தின் மூலம் இதனை ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ளலாம்.

Tuesday, October 22, 2013

பேஸ்புக்கில் வைரஸ்

Facebook
பேஸ்புக் மற்றும் கூகுள் போன்ற சமூக வலைதளங்களில் நிறைய செக்கியூரிட்டி குறைபாடுகள் வந்த வண்ணம் உள்ளன. சமீபத்தில் கூட பேஸ்புக் ஓனர் மார்க் ஜுக்கர்பெர்கின் பேஸ்புக் அக்கவுன்டையே ஒருவர் ஹாக் செய்து பேஸ்புக்கில் உள்ள செக்கியூரிட்டி குறைபாட்டை உணர்த்தினார்.

இது போன்ற பிரச்சனைகளுக்கு ஒரு பக்கம் தீர்வு காண்ப்பட்டு வந்தாலும் சில விஷமிகள் வைரஸை பரப்பக்கூடிய போஸ்ட்கள், பணங்களை ஏமாற்ற மற்றும் அச்சுறுத்தும் வகையில் உள்ள போஸ்ட்களை பேஸ்புக்கில் அப்லோட் செய்கின்றனர். சில சைபர் கிரிமினல்கள் உங்களுது நண்பர்கள் யாராவது ஒருவர் போஸ்ட் செய்வது போல அவர்களுது பெயர்களிலேயே இது போன்ற போஸ்ட்களை அப்லோட் செய்வார்கள். கீழே உள்ள சிலைட்சோவில் எந்த வகையான போஸ்ட்கள் வந்தால் கவனத்துடன் இருக்க வேண்டும் என்பது போன்ற தகவலை பாருங்கள்.

பேஸ்புக் One-fact story என்ற தலைப்புடன் நிறைய போஸ்ட்கள் பேஸ்புக்கில் வருவதை நாம் பார்த்திருப்போம். இது போன்ற போஸ்ட் வந்தால் அதில் உள்ள தலைப்பை வைத்து அது உண்மையானதா என்பதை கூகுளில் பார்த்த பின்பு கிளிக் செய்யுங்கள்.

பேஸ்புக் Breaking news என்ற தலைப்பில் நிறைய போஸ்ட்களை பார்த்திருப்போம். இது போன்ற போஸ்டகளை தெரியாதவர்களிடம் இருந்து வந்தால் தவிர்த்துவிடுங்கள்.

பேஸ்புக் இந்த போஸ்டிற்க்கு கண்டிப்பாக Likes போடுங்கள் என்று கெஞ்சியபடி சில போஸ்ட்கள் வரும் அவைகளை தவிர்த்துவிடுங்கள்.

பேஸ்புக் உடல் எடையை குறைப்பதற்க்கு டிப்ஸ் என்ற வகையில் போஸ்ட்கள் வரும் அவைகளை கிளிக் செய்ய வேண்டாம்.

பேஸ்புக் பெயர் தெரியாத லிங்கை கொண்டு செய்திகள் வந்தால் கிளிக் செய்ய வேண்டாம்.

பேஸ்புக் கிப்ட் கார்டுகளை பகிர்ந்து கொள்ளுங்கள், கிரீட்டிங் கார்ட் மற்றும் பரிசுகளுக்கு கிளிக் செய்யுங்கள் என்று போஸ்ட்கள் வந்தால் கிளிக் செய்யாதீர்கள். இவைகளில் தான் வைரஸ் அதிகம் பரவும்.

Sunday, October 13, 2013

செல்போனின் தரத்தை அறிவது எப்படி?

Mobile
காலையில் தூக்கத்திலிருந்து விழித்து எழுந்தது முதல் இரவு தூங்கப்போகும் வரை உபயோகப் படுத்தக்கூடிய பொருட்கள் எல்லாமே தரமானதாக இருக்க வேண்டும் என்று நாம் ஒவ்வொருவரும் விரும்புவோம். அப்படி அன்றாடம் உபயோகிக்கக்கூடிய பொருள்களில் செல்போன் அதிமுக்கியமான பொருளாக மாறியுள்ள கால கட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். குடும்பத்திற்கு ஒன்று என்றிருந்த நிலை மாறிப்போய் தனி நபரொருவர், ஒன்றிற்கு மேல் செல்போன்களை பயன்படுத்துகின்ற சூழ்நிலையில் இருந்து கொண்டிருக்கிறோம்.

செல்போன்களை அதிகமான நேரம் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அதிகளவில் இருக்கிறது என்ற உண்மையை யாரும் மறுக்க முடியாது, பாதிப்புகள் குறித்து பிறகு வரக்கூடிய பதிப்புகள் மூலம் தெரிந்து கொள்வோம். இந்த செய்தியின் மூலம் நாம் வாங்கியிருக்கின்ற அல்லது வாங்கப்போகின்ற செல்போன்களின் தரம் என்ன என்பதை தெரிந்துக் கொள்வோம். அதாவது நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருள்களின் தரம் உயர்ந்த அல்லது குறைவான அல்லது போலியான பொருட்கள் மார்க்கெட்டில் வலம் வந்து கொண்டிருக்கின்ற சூழலில் செல்போனின் தரத்தை எதனை அடிப்படையாக கொண்டு நிர்ணயிப்பது பற்றி அறிவோம். 

உங்களுடைய செல்போனில் *#06# என்று அழுத்திய உடன் நீங்கள் பயன்படுத்தக் கூடிய செல்போனில் அடையாள நம்பர் 15 இலக்கங்களில் தெரியவரும். அப்படி கிடைக்ககூடிய எண்களில் 7 மற்றும் 8வதாக வரக்கூடிய எண்களை கீழ்கண்ட பட்டியலோடு ஒப்பிட்டு பார்த்து உங்களின் செல்போனின் தரத்தை அறிந்து கொள்ளுங்கள். 

7 மற்றும் 8வது எண் 00 என்றிருந்தால் தரமான தொழிற்சாலையில் தயாரித்தது என்பது மட்டுமல்ல உங்களின் செல்போனும் மிக மிக தரம் உயர்ந்தது என்பதை குறிக்கும். (மிக மிக நன்று) 

7 மற்றும் 8வது எண் 01 அல்லது 10 என்றிருந்தால் தயாரித்த நாட்டின் பெயர் பின்லாந்து மற்றும் தரமான பொருள் என்பதை குறிக்கும். (மிக நன்று) 

7 மற்றும் 8வது எண் 08 அல்லது 80 என்றிருந்தால் தயாரித்த நாட்டின் பெயர் ஜெர்மனி மற்றும் தரம் தாழ்ந்தது அல்ல என்பதை குறிக்கும். (நன்று) 

7 மற்றும் 8வது எண் 02 அல்லது 20 என்றிருந்தால் ஒருங்கிணைப்பு செய்தது துபாயில். தரமான பொருள் அல்ல என்பதை குறிக்கும். (சுமார்) 

7 மற்றும் 8வது எண் 13 என்றிருந்தால் ஒருங்கிணைப்பு செய்தது அஜேர்பயிஜான்;. தரம் குறைந்த பொருள் மற்றும் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்ககூடியதுமாகும். (மோசம்) 

மேற்சொன்ன செய்திகள் அனைத்தும் எதிர்வரும் காலங்களில் தரமான பொருள்களை தேர்ந்தெடுக்க உதவியாக இருக்கும் என்பதற்காகவே இந்த தகவல்களை இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.

கணினியில் USB PORT ஐ DISABLE செய்வது எப்படி?

USB Port
USB PORT அனைவருக்கும் பயன் உள்ளதாக இருந்தாலும் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகம் போன்ற இடங்களில் USB னை பயன்படுத்தவது தடை செய்யப்பட்டு இருக்கும். கணினியில் VIRUS ஆல் பாதிப்பு வந்து விடும் அல்லவா! அதனால் USB PORT னை DISABLE செய்யப்பட்டு இருக்கும்.

இதை செய்யும் வழிமுறைகளை காண்போம்.

REGISTRY EDITOR செல்லவேண்டும் அதற்கு, RUN-----> TYPE "regedit" REGISTRY EDITOR சென்றவுடன், HKEY_LOCAL_MACHINE\SYSTEM\ CurrentControlSet\Services\UsbStor மேலே உள்ள PATH க்கு சென்று பின், START என்பதை இரண்டு முறை கிளிக் செய்யவேண்டும். அடுத்து ஒரு விண்டோ ஒன்று திறக்கும், அதில் HEXDECMIAL VALUE வை SELECT செய்து VALUE DATA என்ற இடத்தில் "4" என்று மாற்றவேண்டும். 

பின் OK கொடுத்து கணினியை RESTART செய்யவேண்டும்.இதில் கவனிக்க வேண்டிய வை 4 என்று மற்றும் முன் அதில் உள்ள எண்னை ("3") நினைவில் கொள்ளவேண்டும்.அதுதான் ENABLE செய்யவேண்டிய எண்.

Saturday, October 5, 2013

கணணியில் சிக்கிக்கொண்ட சீடியை வெளியே எடுப்பதற்கு...

CD ROM
நீங்கள் அடிக்கடி சீடி பயன்படுத்துபவராக இருந்தால் இந்த சூழ்நிலையில் நீங்கள் என்றாவது சிக்கி இருப்பீர்கள். ஆம் உங்கள் சீடி கணணியின் சீடி டிரைவில் இருந்து வெளியே வராமல் உங்களை மோசமான நிலையில் சிக்க வைக்கும்.

எத்தனை முறை சீடி டிரைவின் எஜெக்ட் பட்டனை அழுத்தினாலும் அப்படியே டிரைவ் வெளியே வராமல் இருக்கும். இந்த சூழ்நிலையில் என்ன செய்தால் சீடி டிரைவ் திறக்கப்பட்டு சீடி வெளியே எடுக்கும்படி கிடைக்கும் என்பதனைப் பார்க்கலாம்.

முதலில் சீடி டிரைவ் திறக்கப்பட்டு சிடி இருக்கும் அந்த பிளாஸ்டிக் ட்ரே வெளியே நீண்டு வரவில்லை என்றால் கவலைப்படாதீர்கள். இந்த சூழ்நிலையை சமாளித்து சீடியை கீழ்க்காணும் வழிகளைக் கையாண்டு வெளியே எடுக்கலாம். 

வழி 1: மை கம்ப்யூட்டர் ஐகானில் கிளிக் செய்திடுங்கள். உங்கள் டெஸ்க்டொப்பில் இந்த ஐகான் இல்லை என்றால் நிச்சயம் ஸ்டார்ட் மெனுவில் இருக்கும். இதனைத் திறந்தவுடன் உங்கள் கணணியின் டிரைவ்கள் அனைத்தும் காட்டப்படும். 

இதில் Devices with removable stroage என்ற பிரிவில் சீடியின் படத்துடன் ஒரு ஐகான் இருக்கும். அல்லது சிக்கிக் கொண்ட சீடி ஏதேனும் ஒரு நிறுவனம் தந்துள்ள பேக்கேஜ் என்றால் நிறுவனம் தந்துள்ள ஐகானுடன் அந்த டிரைவ் காட்டப்படும். 

இதன் மீது ரைட் கிளிக் செய்திடுங்கள். கிடைக்கும் மெனுவில் Eject என்ற பிரிவில் கிளிக் செய்திடுங்கள். உங்கள் சீடி டிரைவில் உள்ள எஜெக்ட் பட்டன் தேய்ந்து போய் நீங்கள் அழுத்துகையில் அதன் செயல்பாடு மேற்கொள்ளப்படாத சூழ்நிலையில் இந்த வழி செயல்படும். இதற்கும் சீடி டிரைவ் திறக்கவில்லை என்றால் அடுத்த வழியைப் பார்க்கலாம். 

வழி 2: பேப்பர் கிளிப் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். (ஜெம் கிளிப் என்றும் சிலர் இதனை அழைக்கின்றனர்) அதன் ஒரு முனையை பிரித்து நீட்டுங்கள். சீடி டிரைவின் எஜெக்ட் பட்டன் அருகே சிறிய துளை இருப்பதைக் காணுங்கள். நிச்சயம் இதுவரை நீங்கள் இதனைக் கண்டு கொள்ளாமல் இருந்திருப்பீர்கள். 

இப்போது நிச்சயம் இதன் உதவி வேண்டியதிருக்கிறது. இந்த துளையில் மெதுவாக பிரித்த பேப்பர் கிளிப்பின் சிறிய கம்பியை உள்ளே செலுத்தவும். சிறிது உள்ளே செலுத்தியவுடன் அது ஒரு இடத்திற்கு மேல் செல்லாது. 

இந்த இடத்தில் சிறிய அளவில் அழுத்தம் கொடுக்கவும். எஜெக்ட் செய்யும் போது இயங்கும் இன்டர்னல் லாக் உள்ள இடத்தில் இந்த அழுத்தம் கிடைப்பதால் டிரைவின் கதவு திறக்கும். 

உடனே சீடியை எடுத்துவிட்டு மீண்டும் டிரைவின் கதவினை மூடவும்.

Sunday, September 8, 2013

கணணியின் பாஸ்வேர்ட் மறந்து போனால்....

Log in Screen
இது இலகுவாக செய்யக்கூடிய ஒன்று. MS WINDOWS XPயில் உங்களது பாஸ்வேர்ட் மறந்து போனால் உங்கள் கணணி ஒன் (ON) செய்திருந்தால் அதனை ரீஸ்டார்ட் (RESTART) செய்து கொள்ளவும். ஒன்செய்து கொள்ளவில்லை என்றால் ஒன்செய்து கொள்ளவும். 

கணணி ஒன்செய்ததும் ரொம் (ROM) ரீடாகி விட்டு விண்டோஸ் தொழிற்படும் முன்னர் F8 கீயை அழுத்தவும். அழுத்தியதும் திரையில் ஒரு சில கட்டளைகள் காட்டப்படும். அதில் சேப்மோட் (SAFE MODE) என்பதை என்ரர் (ENTER) செய்து அட்மினிஸ்றேற்றர் கணக்கினூடாக உள்நுழையவும்.

வழமைபோன்று ஸ்ரார்ட் மெனுவிற்குச் சென்று கொன்ரோல் பனலை திறந்து அதில் யூசர் அக்கவுன்ட் என்பதை கிளிக் செய்யவும். கிளிக் செய்ததும் யூசர் அக்கவுன்ட் விண்டோ தோண்றும். அதில் தங்களுடைய கணக்கினை (USER) கிளிக் செய்யவும். வரும் விண்டோவில் ரிமூவ் பாஸ்வேர்ட் (REMOVE PASSWORD) என்பதை கிளிக் செய்து உங்களுடைய பாஸ்வேர்ட்டை நீக்கம் செய்து கொள்ளவும். அதன் பின்னர் மீண்டும் ரீஸ்ரார்ட் (RESTART) செய்து உங்களுக்கு விரும்பிய பாஸ்வேர்ட்டை கொடுத்துக் கொள்ளாம்.